திருப்போரூர்:கண்ணகப்பட்டில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி திருவிழா சிறப்பாக நடந்தது.திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு கிராமத்தில், படவட்டம்மன், கங்கையம்மன் ஆகிய கோவில்களில், ஆடிதிருவிழா நேற்றுமுன்தினம் சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி, கரக ஊர்வலம், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், பிரார்த்தனையாக, ஆடு மற்றும் கோழிகளை நேர்த்திக்கடனாக விட்டனர். இரவு 7:00 மணிக்கு, மேளவாத்தியம் நடந்தது. இதனை, கிராமத்தினர் திரளாக கண்டு மகிழ்ந்தனர். படவட்டம்மன் மற்றும் கங்கையம்மனுக்கு மலர் மாலைகள் சார்த்தியும், ஊரணி பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.