பதிவு செய்த நாள்
06
ஆக
2013
11:08
திருப்போரூர்:கோவளம் பூதகிரீஸ்வரர் கோவிலில், பிரதோஷ விழா சிறப்பாக நடந்தது.கோவளம், முக்குளம் அருகே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கிணறு தோண்டும் போது, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம் கிடைத்தது. திருவேற்காடு ஐயப்ப சுவாமிகள் ஆலோசனைப்படி, பக்தர்கள், அப்பகுதியில் பெரிய ஓலை கொட்டகையில், சிவனை பிரதிஷ்டை செய்து, பிரதோஷம், பவுர்ணமி மற்றும் ஞாயிறு தோறும் அன்னதான வழிபாடு செய்கின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் நடந்த பிரதோஷ விழாவில், பூதகிரீஸ்வரருக்கு மலர் அர்ச்சனை, தீபதூப ஆராதனை நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.படூர்: படூரில் உள்ள மரகதவள்ளி உடனுறை மணிகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்கள் பிரார்த்தனையாக பால், இளநீர், புஷ்பங்களை வழங்கினர். அதை தொடர்ந்து, சுவாமி அம்மனுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, வலம் வந்தார்.