திருப்போரூர்:திருப்போரூரில், இன்று அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.திருப்போரூர் திருவஞ்சாவடி தெருவில், புகழ்பெற்ற செங்கழுநீர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் அமாவாசை நாளில் ஊஞ்சல் சேவை உற்சவம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஆடி அமாவாசையை ஒட்டிய அம்மன் ஊஞ்சல் வைபவம், இன்று இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.சின்னம்மன்கோவில்: காலவாக்கம் சின்னம்மன் கோவிலில், கடந்த 2ம் தேதி துவங்கி ஆடி திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் கரக ஊர்வலமும், நேற்று முன்தினம் பாலாபிஷேகமும், நேற்று தீமிதி மற்றும் தெப்பல் விழாவும் நடந்தது. இன்று இரவு, 9:00 மணிக்கு மகாபாரத நாடகம் மற்றும் தெருக்கூத்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.