பதிவு செய்த நாள்
07
ஆக
2013
10:08
பொள்ளாச்சி : ஆனைமலை, மாசாணியம்மன் கோவிலில், ஆடிஅமாவாசையையொட்டி, பல ஆயிரம் பக்தர்கள், வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலை, மாசாணியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, நேற்றுமுன்தினம் காலை ல6:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும், நடை திறந்திருந்தது. காலை 6:30 மணி, மதியம் 11:30மணி, மாலை 4:30 மற்றும் 6:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்றுமுன்தினம் இரவு முதல், பக்தர்கள், மாட்டு வண்டியிலும், வாகனங்களிலும் குவிந்தனர். இரவு முழுவதும் கண்விழித்து, அம்மனை தரிசித்தனர். நேற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, அம்மனை வழிப்பட்டனர்.