திருத்துறைப்பூண்டி: விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் அருள்பாலித்து வரும், 16 அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் சன்னிதியில், ஆடி அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணி முதல், நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதில் மாலை, 6 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.