திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறும். ஜூலை 30 காலை கொடியேற்றப்பட்டு, மாலையில்,ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் காப்புக்கட்டப்பட்டு, 10 நாள் உற்சவம் துவங்கியது. தினமும் இரவில் தங்கப்பல்லக்கில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி உலா நடந்து வருகிறது. நாளை ஆடிப்பூர உற்சவத்தின் பத்தாம் திருநாளை முன்னிட்டு, காலை 10 மணிக்கு பெருமாளும்,ஆண்டாளும் தேரில் எழுந்தருளுகின்றனர். பின்னர் பக்தர்கள் வழிபாடு நடைபெறும். மாலையில் தேர் வடம் பிடிக்க, தேரோட்டம் நடைபெறுகிறது.