பதிவு செய்த நாள்
08
ஆக
2013
10:08
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகம், சிறப்பு பஸ்கள் இயக்குகிறது. விழா, வரும், 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதையொட்டி, ஆக., 27ம் தேதி முதல் செப்., 12ம் தேதி வரை, இரவு, பகல் எந்நேரமும் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், பூண்டிமாதா கோவில், ஓரியூர், பட்டுக்கோட்டை, சிதம்பரம், புதுச்சேரி, சென்னை, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, இடங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.