பதிவு செய்த நாள்
09
ஆக
2013
10:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து நேற்று, பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று, மதுரையில், வைகை ஆற்றில் இறங்கும் அழகருக்கும், புரட்டாசி பிரம்மோற்சவ விழா, கருடசேவையன்று, திருமலையில் வெங்கடசாலபதிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி சாத்தப்படுவது ஐதீகம். ஸ்ரீரங்கத்தில் நடைபெறும், சித்திரை ரேவதி நட்சத்திர தேரோட்டத்தில், ஆண்டாள் சாத்திய பட்டு வஸ்திரத்தை, ரங்கநாத பெருமாள் அணிய, தேரில் எழுந்தருளுவார். தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விழாவை யொட்டி, ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது.