குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ஆடி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2013 10:08
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நாட்களின் ஒன்றான ஆடி உற்சவத்தில் பெருமாள் சர்வஅலங்காரத்தில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் அருள்பாலித்தார். குருவித்துறைக்கு மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நிறைய பஸ் வசதிகள் உள்ளன. வியாழன், பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் கோயில் வரை செல்ல பஸ் உள்ளது.