தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்-பட்டீஸ்வரர் வழியில் சுமார் 5. கி.மீ தொலைவில் உள்ளது கொற்கை. இங்கு புஷ்பல்லி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரம்மாவுக்கு அருளியதால் சிவனார் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். பூக்களை பூமியில் சிருஷ்டித்ததால், உமையவள் புஷ்பவல்லி எனும் திருநாமம் கொண்டாள். எனவே, இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு ஞானம் கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் வாழ்வில் சுகந்தம் வீசும்; சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்! இங்கு அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, பைரவர் என அனைத்துத் தெய்வ விக்கரகங்களும் இங்கு உள்ளன. அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு, பலன் பெற்றுச் செல்கின்றனர். மற்ற நட்சத்திரகாரர்கள், அவிட்ட நட்சத்திர நன்னாளில் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். தாராசுரம் ஐராவதீஸ்வரர், பட்டீஸ்வரர் துர்கை, ஆவூர் பசுபதீஸ்வரர், ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் ஆகிய கோயில்களில் இருந்து சுமார் 3. கி.மீ தொலைவுக்குள் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் இது. டவுன் பஸ் மற்றும் ஆட்டோ வசதியும் உண்டு.