கோவை மாவட்டம், காரமடையில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர், அவ்வளவு பிரசித்தம்! பொதுவாக எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாளின் திருச்சன்னதியில் பக்தர்களின் சிரசில், சடாரி வைத்து ஆசீர்வதிப்பார்கள். இந்தத் தலத்தில் சடாரிக்குப் பதிலாக, வெள்ளியால் ஆன ஸ்ரீராம பாணத்தை வைத்து ஆசி வழங்குகின்றனர், பட்டாச்சார்யர்கள். இந்த ராமபாணத்தில் சுதர்சன சக்கரம் இருப்பதாகவும், இந்த ஆசீர்வாதத்தால் வீண் பயம் மற்றும் குழப்பத்தில் இருந்து பக்தர்கள் விடுபட்டு, தெளிவு பெறுவர்; நிம்மதியாக வாழ்வர் என்பது ஐதீகம்!