Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகப் பெருமானுக்கும், ... விரதம் கடைபிடிக்கும் முறை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேதங்களும் அவற்றின் சிறப்பும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2013
11:08

நமது தர்மத்தின் பெயர்: நமது தர்மம் வைதிக ஸனாதன ஹிந்து தர்மம் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருளாவது: நமது தர்மத்தின் மூலநூல் வேதமாகும். வேதமோ அனாதி காலமாக இடைவிடாது வந்து கொண்டேயிருப்பது. ஆகையினால் ஹிந்து தர்மம் வைதிக ஸனாதன தர்மமாகும்

வேதங்கள் எவை?: ஒலி வடிவிலுள்ள வேதங்கள் கணக்கில் அடங்கா. ஆனால் மகரிஷி வேத வியாஸர் ஒலி வடிவங்களே சேகரித்து ருக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், அதர்வ வேதம் என்று நான்கு வகைகளாகப் பிரித்து நான்கு வேதங்களாக வகுத்துள்ளார்.

வேதத்தில் உள்ள உட்பிரிவுகள்

ருக் வேதம்-21, யஜுர் வேதம்-109(கிருஷ்ண யஜுர் வேதம் 94-சுக்ல யஜுர் வேதம் 15), ஸாம வேதம்-1000, அதர்வ வேதம்-50 ஆக மொத்தம் 1180 உட்பிரிவுகள்.

வேதம் என்ற சொல்லின் பொருள்: வித் அறி என்ற பொருள்படும் பகுதியிலிருந்து வேதயதி இதிவேத என்ற பகுப்பு முறைப்படி நமது புத்திக்குப் புலப்படாத உயரந்த அறிவினை அளிப்பவை எவையோ அவையே வேதங்கள். அதாவது இன்றைய பவுதிக அறிவு முழுவதும் ஏன் இதற்கு மேலும்கூட முழு அளவில் வேதத்தில் புதைந்து கிடக்கின்றது.

வேதங்களில் சிறப்பம்சம்: வேதத்தில் பலவித வேள்விகள், ஹோமங்கள் இவற்றின் செயல்முறைகள் கூறப்பட்டுள்ளன. உபாஸனா முறைகள் ஜீவாத்மா-பரமாத்மா தொடர்பிற்கான விளக்கம், மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய செயல்களுக்கான பெருவிளக்கம் இவையும் கூறப்பட்டுள்ளன.

வேதங்கள் தோன்றியது: வேதம் யாராலும் எழுதப்பட்டதன்று, வேத ஒலி ஆகாயத்தில் என்றுமே இருந்து வருகின்றது. பெரும் பெரும் முனிவர்கள் தவவலிமையின் துணை கொண்டு நுண்ணிய கேள்வித்திறன் பெற்றனர். அதனது துணையால் வேத மந்திரங்களைக் சொல்லிக் கொடுத்து, இதுவரை அழியாது காத்து வந்துள்ளனர். முனிவர்கள் வேதங்களை இயற்றியதாகவும், தங்கள் சீடர்களுக்குப் போதித்ததாகவும் பிற நாட்டு சரித்திர ஆசிரியர்களை ஒத்துக்கொள்ள  வைத்திருப்பது உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியேயாகும்.

வேதம் ஓதுவதின் லாபம்: ஸ்வரம் தவறாமல் வேத மந்திரங்களை ஓதுவதால் நாட்டிற்கு நன்மை விளைகின்றது. ஸ்ரீ வித்யாரண்யர் வேதங்களுக்கு பொருள் (உரை ) எழுதியுள்ளார். அவ்வுரையே பாரதியப் பண்பாட்டிற்கு உகந்ததாயும், சாஸ்திரத்திற்கு ஒத்தாயும் அமைந்துள்ளது.

வேதங்களுக்கு 18 பெரும் முனிவர்கள் கருத்துரை எழுதியுள்ளனர். இவை ஸ்ம்ருதி கள் என அழைக்கப்படுகின்றன ஸ்ம்ருதி என்ற சொல்லின் பொருள் ஸ்மரணம் (நினைத்தல்) ஆகும். வேத மந்திரங்களைக் கேட்டு நினைவிலிருத்திக் கொண்ட மாமுனிவர்கள் அவற்றை எழுதி வைத்தார்கள். இவையை ஸம்ருதி நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

வேத நாயகன்: வேத நாயகனாக போற்றுவார்கள் சிவபக்தர்கள். வேதங்கள் சிவனாரால் ஆதியில் அருளப்பட்டன. மரங்களாகவும், மலைகளாகவும் அமைந்து வேதங்கள் வழிபட்ட சிவத்தலங்களும் உண்டு. அங்கெல்லாம் வேதபுரீஸ்வரர் எனும் நாமத்துடன் எழுந்தருள்வார் இறைவன். சிவனாரின் மூச்சுக் காற்றாகவும், பாதுகைகளாகவும் வேதங்கள் திகழ்வதாக விவரிக்கின்றன புராணங்கள். இதுகுறித்த சில தகவல்களை அறிவோம்.

வேத மலைகள்...: நான்கு வேதங்களும் மலைகளாக நின்றிருக்கும் தலம் வேதகிரி எனப்படும் திருக்கழுக்குன்றமாகும். இதன் நான்கு சிகரங்களும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு வேதமலையின் மீதும் ஒவ்வொரு யுகத்தில் பெருமான் வீற்றிருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. இப்போது அதர்வண வேதத்தின் உச்சியில் பெருமான் எழுந்தருளியுள்ளார் என்பர். இந்தத் தலத்துக்கு வேதாசலம் என்றும் பெயர் உண்டு.

வேத வனம்...: நான்கு வேதங்களும் மனித வடிவில் சிவனைத் துதித்து வழிபட்டதலம் திருமறைக்காடு. மூடப்பட்டிருந்த கோயில் கதவுகள் திறக்க திருநாவுக்கரசர் பதிகம் பாடியருளியது இந்தத் தலத்தில்தான். திருஞான சம்பந்தர், சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்... என்று பாடி, மீண்டும் கதவுகள் திறக்கவும் மூடவும் செய்தார். இந்தத் திருத்தலத்தை வேத வனம் என்றும் போற்றுவர்.

வேத மான்...: சிவபெருமானின் திருக்கரத்திலுள்ள மான், வேதத்தின் குறியீடு ஆகும். அது எப்போதும் சிவபெருமானின் திருச்செவியில் வேதத்தை ஓதிக்கொண்டே இருக்கிறது. தமிழ் வேதமும், வேதம் மான்மறியே எனப் போற்றுகிறது. சிவபெருமான் கங்காள மூர்த்தியாகவும் பிட்சாடராகவும் விளங்கும்போது இந்த மானும் அவரைத் தொடர்ந்து செல்கிறது. தட்சிணாமூர்த்தியாக அவர் திகழும்போது, அவருடைய பீடத்தின் கீழ் படுத்துள்ளது. சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் திருவடிவங்களில் இறைவனாரின் இடது திருக்கரத்தில், தாவி நிற்கும் கோலத்தில் உள்ளது.

வேதப் பாதுகை...: சிவபெருமானின் திருவடிகளில் விளங்கும் பாதுகைகள் வேதங்களாகும். சிவபெருமான் திருமணக்கோலம் கொண்டபோது, தேவர்கள் வேதமாகிய பாதுகைகளை அவருக்கு அளித்ததாக சிவ மகா புராணம் சொல்கிறது. அந்தப் பாதுகைளை திருமணம் முடிந்ததும் திருத்துருத்தி (குத்தாலம்) ஆலயத்தின் உத்தால மரத்தின் கீழ் விட்டுச் சென்றார் என்றும் கூறுவர். இதை நினைவுறுத்தும் விதமாக, குத்தாலம் எனப்படும் திருத்துருத்தி தலத்தின், சொன்னவாறு அறிவார் ஆலயத்தில் உத்தால மரத்தின் அடியில் பாதுகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவபெருமானின் திருவடிகள் வேதங்கள் என்றும் போற்றுவர். திருநாவுக்கரசர், ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன...ஐயாறன் அடித்தலமே என்று பாடுகின்றார்.

வேத நந்தி..: ஒருமுறை வேதங்கள் நான்கும் பெரிய வெள்ளைக் காளையாகி சிவபெருமானைத் தாங்கின. இதனை வேதவெள்விடை என்று தேவாரம் குறிப்பிடுகிறது.

வேதக் குதிரைகள்: திரிபுர தகனம் செய்யப் புகுந்த இறைவனுக்கு ஒப்பற்ற தேரை செய்து கொடுத்தனர் தேவர்கள். அதற்கு நான்கு வேதங்களுமே குதிரைகளாக இருந்தன. குன்றவில் ஏந்தி வேதப்புரவித் தேர்மிசை நின்றவன்... எனும் பாடல்வரி இதை உணர்த்துகிறது.

வேத மரங்கள்: வேதாரண்யம் எனும் தலத்தில் நான்கு வேதங்களும் தல மரங்களாக உள்ளன. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு மரம் தல மரமாக உள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ள மாமரமும், திருக்குற்றாலம் தலத்திலுள்ள பலா மரமும் வேதத்தின் வடிவம் என்கின்றன புராணங்கள்.

வேதச் சிலம்பு: காஞ்சியில் உள்ள சிவாலயங்களில் ஒன்று மறைநூபுரம் ஆகும். இந்தத் தலத்தில், யுக முடிவில் வேதங்கள் வழிபட்டுச் சிவபெருமானுக்கு காற்சிலம்பாயினவாம். சிவபெருமான், தமது தூக்கிய திருவடியை அசைத்து சிலம்பொலி மூலம் பிரம்மனுக்கு வேதங்களை உபதேசித்த தலம் இது என்பார்கள்.

வேத வீணை: வேதத்தை விரித்தோதும் ஆலமர் செல்வனான சிவபெருமானின் கரத்திலுள்ள வீணையும் வேத வீணை என்றே அழைக்கப்படுகிறது. இது வேதத்திலுள்ள சுரங்களை இனிமையாகப் பொழிவதாகும். தக்க யாகப் பரணியில் வேத வீணையைப் பற்றிய குறிப்பைக் காணலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar