பதிவு செய்த நாள்
12
ஆக
2013
11:08
ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற தர்மசம்வர்தினி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், துர்க்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, ஆகஸ்ட், 16ம் தேதி, துர்க்கையம்மன் பக்தர்கள் மகளிர் குழு சார்பில், 108 சங்கபிஷேக விழாவும், திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. அன்று காலை, 7 மணிக்கு, கணபதி ஹோமம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில், 108 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. பூஜையில், ராகுதோஷம், திருமணத்தடை, குழந்தை பேறு, களஸர தோஷம் உள்ளவர்கள் பங்கேற்றால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை, துர்க்கையம்மன் பக்தர் மகளிர் குழுவினர் செய்துள்ளனர்.
*அதேபோல், கைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள சுப்ரமணியர் ஸ்வாமிக்கு, ஆகஸ்ட், 15ம் தேதி, குரு ஆராதனை விழா நடக்கிறது. காலை, 10 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதøனையும், மாலை, 4 மணிக்கு, அருணகிரிநாதர் உற்சவமூர்த்தி ஆலயம் வலம் வந்து பதர்களுக்கு அருள்பாலிக்கிறார்.