கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஸ்ரீ ஏகம்பரமேஸ்வர காமாட்சியம்மன் கோவில் ஆடி பூர விழாவையொட்டி பக்தர்கள் பால் குட ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 6 மணிக்கு மங்கள இசை, 7 மணிக்கு கோ பூஜை நடந்தது. 7.30 மணிக்கு விஸ்வ சித்தி யாகம், மஹா பூர்ணாஹீதி நடந்தது. 9.30 மணிக்கு பால் குட ஊர்வலம் நடந்தது. 12 மணிக்கு ஜே.கே., மஹாலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் நகர் வலம் நடந்தது.