ஊத்தங்கரை: ஊத்தங்கரை, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. பிற்பகல் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கப்பட்டது. இரவு ஸ்ரீசக்தி கரகம் மற்றும் ஸ்ரீ கூத்தாண்டப்பர் கரகம் அழைத்தல் நடந்தது. ஸ்வாமி ஸ்ரீ வேடியப்பன் பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்த நடத்தது. இரவு ஸ்ரீ பராசக்தி மாரியம்மனுக்கு திரு விதி உலா நடந்து. விழாவையொட்டி, வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை வாணியர் நலச்சங்கம், இளைஞர் சங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.