பதிவு செய்த நாள்
14
ஆக
2013
10:08
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், வரும், 16 ஆம் தேதி, நவசக்தி அர்ச்சனை விழா நடக்கிறது. சேலம் சுகனனேஸ்வரர் கோவில், 2000 ஆண்டு பழமையானது. மாதந்தோறும், சொர்ணாம்பிகை அம்மனுக்கு, பல்வேறு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நான்கு வெள்ளிக்கிழமை வருவது இயல்பானதாகும். இதில், ஐந்தாவது வெள்ளிக்கிழமை வரப்பெற்றால், ஸ்ரீ நவசக்தி அர்ச்சனை விழா நடைபெறும். 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்த ஆண்டு ஆடி மாதத்தில், ஐந்தாவது வெள்ளிக்கிழமை வருகிறது. அதை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சொர்ணாம்பிகை அம்மனுக்கு, வரும், 16 ஆம் தேதி மாலை, 6.30 மணிக்கு, ஒன்பது அர்ச்சர்கள், ஸ்ரீநவசக்தி அர்ச்சனை செய்கின்றனர். 16 வகையான உபசாரத்துடன், வேத மந்திரம் முழங்க விழா நடத்தப்பட்டு, அம்மனுக்கு சாத்துப்பாடி செய்யப்பட்ட, 18 ஆயிரம் வளையல், மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.