Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு பெரியாயி! கண்வர் மகரிஷி ஆலயம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மண்டையூர் முருகன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
04:08

திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள மண்டையூரில் சாலையிலேயே உள்ளது முருகன்  ஆலயம். ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் வேலை ஏந்தியபடி புன்னகை மாறா முகத்துடன் அருள்பாலிக்கிறார். ஆறுமுகம் பன்னிருகை கொண்ட கந்தவேள், இங்கே ஒரு முகமும் இரு கரமும் கொண்டு காட்சியளிப்பதும், வாகனமான மயில் அருகே இல்லாமல் இருப்பதும் ஏன்? என்ற கேள்வி எழுகிறது! அதற்கு பச்சைமயில் ஏறும் வேலன் இங்கே பாலனாகக் காட்சி அளிப்பதுதான் காரணம் என்ற பதில் கிடைக்கிறது. அதை உறுதி செய்கிறது இங்கே ஆட்சி செய்யும் முருகனின் பால தண்டாயுதபாணி எனும் திருநாமம். குழந்தை உருவில் இருப்பதால் இவரை வழிபடுவோர்க்கு குழந்தை வரம் நிச்சயம். ஆலயத்தின் திருச்சுற்றில் வினாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கின்றனர். விஷ்ணு துர்க்கைக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வணங்குகின்றனர் பெண்கள். அவர்கள் குறைகளைக் களைவதில் இந்த துர்க்கை வல்லவள் என்பது நம்பிக்கை. அடுத்து பக்த ஆஞ்சநேயர், நாகர் சன்னதிகளும் உள்ளன. அனுமனுக்கு வடைமாலை சாத்தி பக்தர்கள் பிரார்த்தனை செய்து பலன் பெறுகின்றனர். ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். தைமாதம் பூசத் திருவிழா அன்று முருகனுக்கு பதினாறு திரவியங்களைக் கொண்டு விசேஷ அபிஷேகமும் நடைபெறும். பல நூறு பக்தர்கள் இந்த அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் அருளைப் பெற்று முத்தான வாழ்வு பெறுகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar