பதிவு செய்த நாள்
19
ஆக
2013
10:08
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 1008 விளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை உட்பட பல்வேறு வேண்டுதல் நிறைவேற, சிவாச்சாரியார்கள் விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை முடித்து கோயில் விளக்குகளில் மகாலட்சுமியை ஆவாரணம் செய்து விளக்கேற்றி பூஜை செய்தனர்.
உயிர்பலியை தடுக்க இரும்பு தடுப்புகள்: திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் உயிர்பலியை தவிர்க்க தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக ஆழம் கொண்ட இப்பொய்கையின் மூன்று பகுதிகளில் படிக்கட்டுகள், ஒரு பகுதியில் மலை அடிவாரப் பாறையும் உள்ளது. அப்பகுதியினர் குளிக்க, துணி துவைக்க இதை பயன்படுத்தி வருகின்றனர். சரவணப் பொய்கையில் ஒரு பகுதியிலுள்ள வழுக்குப்பாறையில், உள்ளூர் மற்றும் வெளியூர் சிறுவர்கள், குளிக்கும்போது, வழுக்கி விழுந்து பலியாகினர். ஆழம் அறியாமல் தண்ணீருக்குள் பலர் குதிக்கின்றனர். இதில் பலர் இறந்து விடுகின்றனர். படிகளில் பாசம் அதிகம் இருப்பதால், பலர் வழுக்கி விழுந்து உயிரிழந்தனர். ஆண்டுக்கு 10 பேர் வரை பலியாயினர். அங்கு உயிர்பலியை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, சரவணப்பொய்கை படிக்கட்டுகளில் நான்கு இடங்களில் 4.5 லட்சம் ரூபாயில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆழம் குறைவாக உள்ள பகுதிவரை தண்ணீருக்குள் பொய்கை முழுவதும் இதுபோல தடுப்புகள் அமைக்க வேண்டும். அப்போதுதான், நீச்சல் தெரியாதவர்கள் ஆழம் அதிகமான பகுதிக்கு செல்வதை தடுக்கவும், உயிர்பலியை முற்றிலும் தடுக்கவும் முடியும்.