பதிவு செய்த நாள்
19
ஆக
2013
10:08
பழநி: பழநி மலைக்கோவிலில், குரங்குகளை பிடிக்கும் பணி, நேற்று, இரண்டாவது நாளாக நடந்தது. பழநி மலைக்கோவிலில், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குரங்குகளை பிடிக்கும் பணியில், வனத்துறை இறங்கியுள்ளது. இதற்கு உதவியாக, விராலிமலையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் ஈடுபட்டனர். பிடிபட்ட குரங்குகள், ஆண்டிபட்டி வனப்பகுதியில் விடப்பட்டன. ரேஞ்சர் கணேசன் கூறுகையில், இரண்டாம் நாளான, நேற்று, 46 குரங்குகள் பிடிபட்டன; இதுவரை, 120 குரங்குகள் பிடிபட்டுள்ளன. தொடர்ந்து, குரங்குகளை பிடிக்கும் பணி நடக்கிறது, என்றார்.