Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணா இங்கே வா...வா.. கிருஷ்ணஜெயந்தி பூஜை முறை! கிருஷ்ணஜெயந்தி பூஜை முறை!
முதல் பக்கம் » கிருஷ்ண ஜெயந்தி
கண்ணனின் லீலை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
05:08

கண்ணனின் லீலைகளை தேவர்களும் செய்ய முடியாது. கிருஷ்ணன் தேவர்களுக்கும் தேவன்.  ஒரு கோபி தயிர், பால், வெண்ணெய் விற்கப் புறப் பட்டாள். கண்ணன் மீதுள்ள அன்பில் தன் உணர்ச்சி யையும் இழந்துவிட்டாள்.  அதனால்,  வாங்கலையோ தயிரு என்று சொல்ல மறந்துவிட்டாள். அவள் புத்தியில் மாதவன்  குடிகொண்டிருந்ததால்,  வேண்டுமா? கோவிந்தன் வேண்டுமா? என்று முழங்கிவிட்டாள். சூதுவாது தெரியாத கோபி பதினான்கு உலகிற்கும் நாதனாகிய கண்ணனைப் பானையில் எடுத்து வந்து, கண்ணன் அன்பில் தன்னையும் மறந்து, அவ்வளவு ஆழ்ந்திருந்தாள்! என்ன சொல்லுகிறோம் என்ற உணர்ச்சியே அவளுக்கு இல்லை. கண்ணன் காதில் இது விழுந்தது. உடனே அவன்,  இவள் பொல்லாதவள். என்னையே விற்கப் புறப்பட்டுவிட்டாளே! என்று நகைத்தான். அந்தக் கோபி சென்ற வழியில் கண்ணன் தோன்றி னான். அவளிடம்,  நான் கோகுல அரசன். எனக்கு வெண்ணெய் தா என்றான். அன்பு மிகுதியால் சில சமயங்களில் குறும்பு செய்யத் தோன்றும். கோபியின் இருதயத்தில் அன்பு ததும்பியிருந்தது. அவள் கண்ணனைக் கோபமூட்டுகிறாள்.  நீ எப்படி கோகுலத்தின் ராஜா? கோகுலத்தின் அரசன் பலராமனல்லவா? நான் அவனுக்குத்தான் வெண்ணெய் கொடுப்பேன். உனக்குக் கிடையாது. நந்தகோபன் இந்தக் கரிக்கண்ணனை எங்கிருந்துதான் தூக்கி வந்தாரோ! நந்தபாபா எவ்வளவு சிவப்பு? நீ வெறும் கரி! என்று வேண்டுமென்றே சீண்டினாள். கண்ணன் கோபியின் புடைவையைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவள்,  என்னை விடுடா, நான் போகணுமடா. என் பால், தயிர் எல்லாம் சிந்திக் கொட்டிப் போகும். என் மாமியார் என்னைக் கோபிப்பாள் என்றாள். கண்ணன் விடவில்லை. கோபி ஒரு மோதுமோதி புடைவையை விடுவித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். சற்று தூரம் போய்த் திரும்பிப் பார்த்தாள். கண்ணன் கோபம் கொண்டு நிற்கிறான். அவளுக்குத் தாங்கவில்லை. ஓடிவந்து,  உனக்கு வெண்ணெய் கொடுக்கிறேண்டா, கற்கண்டு கொடுக்கிறேன். என் தவறை மன்னித்துவிடப்பா என்கிறாள். கண்ணன்,  ஒன்றுமே வேண்டாம், போ என்றதும், திரும்பி அவள் புறப்பட்டுச் செல்கிறாள். சற்று தூரம் சென்றதும் கண்ணன் ஒரு கல்லைத் தயிர்ப் பானை மீது எறிந்தான். பானை உடைந்துவிட்டது.

இந்த மாதிரி லீலை வேறு எந்தத் தெய்வமாவது செய்ய முடியுமா? ஸ்ரீகிருஷ்ணன்,  எல்லோ ருடைய கணவன் என்றும் சொல்லுகிறான். கண்ணன் உடனே வீடு திரும்பி, ரொம்ப அமைதியுடன் யசோதையின் மடியில் ஒளிந்து கொண்டான். சற்று நேரத்தில் அந்த கோபியும் வந்து சேர்ந்தாள். அவள் பாலகிருஷ்ணனைப் பற்றிக் குற்றம் சொன்னாள்.   குழந்தைக்கு ரொம்பவும் செல்லம் தருகிறீர்கள். அதனால்தான் அவன் இத்தனை வம்பு செய்கிறான். இன்று அவன் என் தயிர்ப் பானையை உடைத்து, என் துணிகளைப் பாழாக்கிவிட்டான். தயிர் கொட்டி வீணாகப் போயிற்று என்றாள். பாலன்,  அவளைப் போகச் சொல்லு. எனக்குப் பயமாக இருக்கிறது. அவள் போகட்டும், பிறகு நான் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் என்றான்.  பிறகு,  அந்த கோபி ஒரு பெரும் லோபி. இரண்டு மூன்று நாளாகப் புளித்து, கெட்டுப் போன பழைய தயிரை விற்க எடுத்து வந்திருந்தாள். அவள் இவ்வளவு மோச மான தயிரை விற்கக் கொண்டு போவது நல்லதா, சொல்லு. யாராவது ஏழை எளியவர் அதை வாங்கிச் சாப்பிட்டு நோய் வந்தால்...? அதற்கா கவே நான் அவள் தயிர்ப் பானையை உடைத் தேன். நான் ஆரோக்கிய பிரசார மண்டலத்தின் தலைவன் அல்லவா....? என்கிறான். யசோதை அந்த கோபியை அழைத்து,  இம்மாதிரி கெட்டுப் போன தயிரை விற்கலாமா? என்று கடிந்து அதட்டினாள்.  கோபி உடனே சிரித்தாள்.  கிருஷ்ணன் பேச்சில் கை தேர்ந்தவன்தான்! என்றாள். தயிர்ப் பானையை உடைத்தாலும் கிருஷ்ணன் மீது அவள் குறைப்படவில்லை. வழியே போய்க் கொண்டிருக்கும் பெண்ணைப் பிடித்து இழுத்து, தயிர்ப் பானையையும் உடைக்கக்கூடிய வேறு தெய்வம் ஏதேனும் உண்டா?  மற்றவர்கள்,  இம்மாதிரி செய்தால் நமக்கு அடி கிடைக்கும் என்று அஞ்சுவார்கள்.  யாரும் பூஜை செய்து உபசாரம் செய்ய மாட்டார்கள் என்றும் சொல்வார்கள். ஸ்ரீகிருஷ்ணனுடைய இனிமையான லீலைகள் தெய்விகமானவை. மிக அற்புதமானவை.மற்ற தெய்வங்கள் தங்கள் கையில் அஸ்திர, சஸ்திர, ஆயுதங்கள் ஏந்திக் காட்சி தருகிறார்கள். ஒருவர் கையில் சுதர்சனம் இருக்கிறது. இன்னொருவர் கையில் அம்பும் வில்லும் இருக்கின்றன. மற்றொருவர் கையில் திரிசூலம்.  கண்ணன் கையில் ஆயுதமே கிடையாது. அவன் ஒரு கையில் புல்லாங்குழலும், ஒரு கையில் வெண்ணையும், கற்கண்டும்தான் வைத் திருக்கிறான். அந்த தெய்வம் நம் அனைவரையும் காக்கட்டும்.

பாம்பா... பயமில்லை: கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கி, பகாசுரன் என்ற அரக்கனை கொன்றான் குழந்தை கண்ணன். இதை கேள்விப்பட்ட பூதனையின் சகோதரன் அகாசுரன் என்பவன் கண்ணனையும், அவனது அண்ணன் பலராமனையும், ஆயர்பாடி சிறுவர்களையும் கொல்லப் புறப்பட்டான். மகிமா என்னும் யோகசித்தி பெற்ற அவன், விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் படைத்தவன். ஆயர்பாடி வந்த அவன், எட்டு மைல் நீளமுள்ள பாம்பாக உருவெடுத்து நின்றான். அவனுடைய வாய் குகை போல காட்சியளித்தது. ஆனால், சிறுவர்கள் சிறிதும் பயமில்லாமல்,கண்ணன் இருக்க நமக்கென்ன பயம்?என்று அகாசுரனைப் பார்த்து கைகொட்டி சிரித்தனர். அகாசுரனின் வாய்க்குள் நுழைந்த கண்ணன் தன் தோற்றத்தை விரிவுபடுத்தினார். மூச்சுத்திணறிய அசுரனின் தலை சுக்குநூறாக வெடித்து சிதறியது.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே
: யமுனைநதிக்கரையில் கிருஷ்ணன் பசுமேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் கண்ணனுக்கு வந்துவிடும். மதியம் கிருஷ்ணனும், நண்பர்களும் பசியோடு மதிய உணவு சாப்பிட வட்டமாக உட்காருவர். கிருஷ்ண@ணாடு நண்பர்கள் வெண்ணெய், பால், தயிர், பழங்களால் ஆன உணவுகளை இலைகளில் பரப்பி உண்ணத் தொடங்குவர். கேலியும் கிண்டலுமாக விளையாடிக் களிக்கும் அவர்களைக் கண்டு, தேவர்கள் தங்களுக்கு  இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என ஏங்குவர். ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல கிருஷ்ணரும், நண்பர்களும் அமர்ந்த காட்சி அழகாக இருக்கும். ஆண்டாளும் திருப்பாவையில்,கறவை பின்சென்று கானம்(உணவு) சேர்ந்துண்போம் என்று இந்தக் காட்சியைப் பாடி மகிழ்கிறாள்.

 
மேலும் கிருஷ்ண ஜெயந்தி »
temple news
கிருஷ்ண ஜெயந்தியன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் ... மேலும்
 
temple news
கிருஷ்ணஜெயந்தியன்று காலை லட்சுமியின் அம்சமான பசுவுக்கு உணவளிக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணன் படம் ... மேலும்
 
temple news
கிருஷ்ணரின் தந்தை வசுதேவர், தன் குழந்தையைக் கம்சனிடம் இருந்து காப்பாற்றும் வகையில், ஆயர்பாடியில் உள்ள ... மேலும்
 
temple news
கிருஷ்ணர் சிறையில் பிறந்த போதே பலவகை ஆபரணங்களுடன் தோன்றினார். அவரது தந்தை வசுதேவர், குழந்தையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar