விழுப்புரம்: மகாலட்சுமி குபேரர் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி தாயார் மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.விழுப்புரம் திருநகர் மகாலட்சுமி குபேரர் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 7 மணி முதல் சுமங்கலி பெண்கள் நோம்பு எடுத்தனர். பின்னர், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், தாயார் மகாலட்சுமி அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கோவிந்தாபுரம் வெங்கடேச பாகவதர் நாம சங்கீர்த்தனம் நடந்தது.