பதிவு செய்த நாள்
20
ஆக
2013
10:08
கந்தர்வக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை நகரில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக துவங்கியது. துவக்கத்தில் கணபதி பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடந்தன. முதல்வாரம் மண்டல படிதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம், 1 மணிக்கு கோவில் வளாகத்தில் கஞ்சி வார்த்தல், இரவு, 8 மணிக்கு அம்மனுக்கு மலர் அலங்காரம் நடந்தது. பின் ராஜவீதிகள் வழியாக அம்மன் மலர் அலங்காரத்தில் தேரில் ஊர்வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மன் திருவீதியுலாவை முன்னிட்டு, வீடுகள்தோறும் வாசலில் கோலமிட்டு, தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார கிராம மக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.