ஊத்துக்கோட்டை: உலக நன்மைக்காக, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், ருத்ர ஹோமம் நேற்று நடந்தது.முன்னதாக, வால்மிகீஸ்வரர், அன்னை மரகதாம்பிகை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் கலசம் வைத்து, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து, ருத்ர ஹோமம் நடத்தப்பட்டன.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.