பதிவு செய்த நாள்
21
ஆக
2013 
10:08
 
 அம்பாலா: ரக்ஷா பந்தன் விழாவுக்காக, அரியானா மாநில போக்குவரத்துத் துறை, பெண்களுக்கு, இலவச பேருந்து சேவையை அளித்தது. ஒவ்வொரு ஆண்டும், ச்ரவண மாதமான, ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, "ரக்ஷா பந்தன் என்னும் விழா, இந்துக்களால் கொண்டாடப் படுகிறது. அன்று, உடன்பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும், தங்கள் சகோதரர்களாக ஏற்று, "ராக்கி (வலது கையில் கயிறு கட்டுவது) கட்டுவதை, பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த விழா நேற்று, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரியானா மாநிலத்தில், ரக்ஷா பந்தன் நாளன்று, அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து சேவையை, மாநில போக்குவரத்துத் துறை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, "ரக்ஷா பந்தன் விழாவுக்காக, கூடுதலாக, 20 பேருந்துகள், நேற்று இயக்கப்பட்டன. பெண்களுடன், இரு குழந்தைகளையும், கட்டணமின்றி அழைத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.