எலுமிச்சம்பழ மாலையில் எத்தனை பழங்களைக் கோர்த்து அணிவிப்பது நல்லது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2013 03:08
நிறைய எலுமிச்சம்பழ மாலைகளை அணிவித்து சில கோயில்களில் அம்மனைப் பார்க்கிற போது இவ்வளவு பாரத்தைச் சுமக்கச் செய்கிறார்களே என்று எண்ணத் தோன்றுகிறது. சாஸ்திரத்தில் இது போன்ற விஷயங்களும் இல்லை. எனினும் வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அவசியமான பிரார்த்தனையை முன்னிட்டு, பூமாலைகளின் நடுவில் கொஞ்சமாக, அதாவது அதிகபட்சம் 16 பழங்களைக் கோர்த்து அணிவித்தாலே போதும். பழைய மாலைகளைக் கழற்றி விட்டு புதிய மாலைகளைப் போடுவதையும் அர்ச்சகர்கள் வழக்கத்தில் கொள்ளலாம்.