சிலப்பதிகார தலைவி கண்ணகி. இவளது கணவன் கோவலன் திருடன் என குற்றம் சாட்டப்பட்டு வெட்டப்பட்ட செய்தியை அறிந்த இவள், தன்னிடமிருந்த சிலம்பை எடுத்துக் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்க அரண்மனைக்கு வந்தாள். அவள் ஒற்றைச் சிலம்பு ஏந்திய கோலத்தில் இருக்கும் கோயில் மதுரை சிம்மக்கல்லில் உள்ளது. செல்லத்தம்மன் கோயில் என அழைக்கப்படும் இங்கு மூலவராக கண்ணகி விளங்குகிறாள். இவளுக்கு அடைக்கலம் கொடுத்த மாதரிக்கும் சந்நிதி இருக்கிறது.