மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளக்கரையில் கன்னிமூலையான தென்மேற்கில் விபூதி விநாயகர் (திருநீற்றுப் பிள்ளையார்) வீற்றிருக்கிறார். பக்தர்கள் தங்கள் கைகளாலேயே திருநீறு அபிஷேகம் செய்து இவரை வழிபடுவர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் நட்சத்திர நாட்களில் இவருக்கு விபூதி அபிஷேகம் செய்ய, நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.