பிரதோஷ விரதமிருக்கும் பக்தர்கள் மாலையில் சிவதரிசனம் செய்துவிட்டு சிவபுராணம் படிப்பது வழக்கம். அவர்களுக்கு ஒரு நிபந்தனையை பாடலின் கடைசியில் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்பல்லோரும் ஏத்தப் பணிந்து என்பதே அது. நமச்சிவாய வாழ்க என்று முதல் வரியிலிருந்து பல்லோரும் ஏத்தப் பணிந்து என்பது வரை அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். அப்படியானால் தான் நன்மை உண்டு என்கிறார். பிரதோஷ வேளையில் சிவபுராணத்தின் பொருளையும் அருளாளர்கள் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும்.