சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணி திருவிழா நாளை தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2013 12:08
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. புகழ் பெற்ற சாமிதோப்பு அய்யாவைகுண்டசாமி பதியில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு கொடிபட்டம் பதி வலம் வருதல், 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. கொடியை பாலஜனாதிபதி ஏற்றுகிறார். பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தொட்டில் வாகனத்தில் அய்யா பதிவலம் வருதல் நடக்கிறது.
பரிவேட்டை: எட்டாம் நாள் (30-ம் தேதி) அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 5 மணியளவில் பதிவலம் வருகிறார். பின்னர் முத்திரிகிணறு அருகில் அம்பு எய்து கலி வேட்டையாடுகிறார். பின்னர் சாஸ்தான்கோயில்விளை, சோட்டபணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.