சூசைபாண்டியாபுரம் புனித ராயப்பர் ஆலய திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2013 12:08
சாயர்புரம்: புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் புனித ராயப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரம் புனித ராயப்பர் ஆலய திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி மாலை முதன்மை செயலர் அமல்ராஜ் தலைமையில் செபமாலையும் அதை தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் மாலை செபமாலையும், திருப்பலியும் நடக்கிறது. 9ம் திருவிழாவான 28ம் தேதி மாலை வட்டார முதன்மை குரு ஜெரால்ட் குருஸ், அருட் தந்தையர்கள் ரெமிஜியுஸ், செய்கர் ஆகியோர் தலைமையில் ஆராதனையும், சப்பர பவனியும் நடக்கிறது. 29ம் தேதி காலை அருட் தந்தையர்கள் பன்னீர்செல்வம், அந்தோணி ரூபர்ட், மணி, சேவியர், ஆகியோர் தலைமையில் திருவிழா கூட்டுதிருப்பலி நடக்கிறது. அதை தொடர்ந்து சப்பரபவனியும், இரவு கொடியிறக்கம், செபமாலை, நற்கருணை ஆசீர், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 31ம் தேதி மாலை திருப்பலியும், அசனவிருந்தும் நடக்கிறது.