பதிவு செய்த நாள்
22
ஆக
2013
12:08
சிவகங்கை: செப்.,11 அன்று விவேகானந்தர் ரதம், சிவகங்கை வருகைக்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாக, விழாக்குழு தலைவர் வேங்கடகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சுவாமி விவேகானந்தர் செப்.11ல் சிகாகோ மாநாட்டில் உரையாற்றினார். அன்றைய தினத்தை நினைவு கூறும் வகையில், சிவகங்கைக்கு, விவேகானந்தர் ரதம் வருகை தருகிறது. இதற்காக, நகராட்சி துணை தலைவர் சேகர் தலைமையில் வரவேற்பு குழு, கவுன்சிலர் முத்துப்பாண்டி தலைமையில் ஊர்வலக்குழு,பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் உபசரிப்பு குழு, ஆக்ஸ்வர்டு மெட்ரிக்., பள்ளி நிர்வாகி சியாமளா வெங்கடேசன் தலைமையில் கலைநிகழ்ச்சிக்குழு, கவுன்சிலர் ராமநாதன் தலைமையில் விளம்பரகுழு அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை,ஓவியம், இசை போட்டி நடத்தி, பரிசு வழங்கப்படும். செப்.,11 அன்று முத்துப்பட்டியில், ரதத்திற்கு வரவேற்பு அளித்து, அரண்மனை, ராஜா மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., பள்ளி, சுவாமி விவேகானந்தர் பள்ளி, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி, 21ம் நூற்றாண்டு மெட்ரிக்.,பள்ளி, சு.பா. தே.வி., பள்ளிக்கு ரதம் செல்லும்,என்றார்.