கும்மிடிப்பூண்டி: சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள ஏகவள்ளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள ஏகவள்ளியம்மன் கோவிலில், புதிய விமான கோபுரம் அமைக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவிலில், கும்பாபிஷேகத்தை ஓட்டி, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு, கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் ஏகவள்ளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழாவை காண, கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அம்மனுக்கு மாங்கல்ய தாரணம், வடை பொங்கல் வைக்கப்பட்டது. இரவு, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.