வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா கோயில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பஸ்களை இயக்க திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இத்திருவிழா ஆக. 29 லிருந்து செப். 9 வரை நடைபெற உள்ளது. கொடியேற்றம் நடைபெறும் ஆக.29 ல் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள், வேளாங்கண்ணி செல்வர். இவர்களுக்காக திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து சிறப்பு பஸ்கள் ஆக.28 முதல் செப். 9 வரை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு 60 பஸ்கள், அனைத்து நேரத்திலும் இயக்கப்படும். இதனை கண்காணிப்பதற்காக திண்டுக்கல் மற்றும் வேளாங்கண்ணியில் தனிக்குழுக்கள் செயல்படும் என்று பொது மேலாளர் சுப்பையா தெரிவித்துள்ளார்.