ராஜபாளையம் : மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், ராஜபாளையம் அருகே செண்பகதோப்பு ரோட்டில், ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆக, 23 நடந்த வருஷாபிஷேகத்திற்கு, ராஜபாளையத்தில் இருந்து பக்தர்கள், பால்குடம் எடுத்து சென்றனர். மதியம் ஒரு மணிக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தன. மாலை 4.30 மணிக்கு, அய்யனார்சுவாமிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடந்தன. இரவு 8 மணிக்கு, விநாயகர், பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன