பதிவு செய்த நாள்
30
ஆக
2013
10:08
கடையநல்லூர்:பண்பொழி திருமலைக்கோயிலில் பத்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் சிறப்பாக நடந்து வருகிறது. 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கும்ப ஜெபம், கந்தஜெபம், விசேஷ அர்ச்சனைகள், குமரனுக்கு அபிஷேகம், அடுத்து விமானத்திற்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து குமரனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், பரமேஸ்வரி அருணாசலம், பண்பொழி அ.தி.மு.க., செயலாளர் பரமசிவன், முன்னாள் அறங்காவலர்கள் கிளாங்காடு மணி, வேல்சாமி, கிருஷ்ணாபுரம் ரவிச்சந்திரராஜா, மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், கிட்டுபிள்ளை, ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருமலையில் திருக்குமரன் வீதியுலா நடந்தது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் பண்பொழி, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், குற்றாலம், வடகரை, அச்சன்புதூர், நெடுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.