பதிவு செய்த நாள்
31
ஆக
2013
10:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜேடுகொத்தார் முனிகானப்பள்ளி வெங்கட்ரமணசாமி கோவில் கும்பாபிஷேக மண்டல அபிஷேக பூர்த்தி விழா, ஆக 30 வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி காலை, 6 மணிக்கு மங்கள இசை, கலச ஆராதனை, யாகபூஜை நடந்தது. யாக பூஜையை வரட்டனப்பள்ளி நரசிம்மசாமி ஆலய அர்ச்சகர் வெங்கடாத்திரி நடத்தினார். 8 மணிக்கு மஹா பூர்னாஹூதி, கலச புறப்பாடு,பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. காலை, 9 மணிக்கு மஹா மங்களார்த்தி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கல்யாணம், பிரகார உற்சவம், தீர்தப்பிரசாதம், அன்னதானம் நடந்தது. 11 மணிக்கு வசந்த உற்சவமும், 1 மணிக்கு "பெருமாள் பெருமை என்ற தலைப்பில் கீரை பிரபாகரனின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. மாலை, 6 மணிக்கு பெருமாள் சாமி உற்சவம் ஜேடுகொத்தூர், சின்னமட்டராப்பள்ளி இரண்டு ஊர்களுக்கும் புறப்பட்டு வாணவேடிக்கை, நையாண்டி, கரகாட்டம், சிலம்பாட்டம் நடந்தது.