விழுப்புரம்:விழுப்புரம் வி.மருதூர் பஜனை கோவில் தெருவில் அமைந்துள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.விழாவையொட்டி கடந்த 28ம் தேதி காலை 8:00 மணிக்கு வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.பின்னர் 9:00 மணிக்கு ராமாயண தெருவில் நடந்த உறியடி விழாவை முன்னாள் சேர்மன் ஜனகராஜ் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மருதூர் பகுதியில் சுவாமி வீதியுலா நடந்தது.இதில் காங்., மாவட்ட பொதுசெயலாளர் செல்வராஜ், ம.தி.மு.க., நகர செயலாளர் சம்மந்தம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.