கண்டமங்கலம்:கண்டமங்கலம் அடுத்த திருமங்கலம் கிராமத்தில் உள்ள பழமையான சிதம்பரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வேள்வி நடந்தது.பக்தர்கள் பைரவரிடம் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். தமிழ்முறைப்படி வேள்வி மற்றும் பக்தர்கள் கூட்டு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை அன்னதான அறக்கட்டளை நிர்வாகி கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.