சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2013 11:09
சுசீந்திரம்:சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா வரும் 10 தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஒன்பதாம் நாள் விழாவின்று மாலை தேரோட்டம் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது. வரும் 10-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் திருக்கொடியேற்றப்படுகிறது. விழா நாட்களில் தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலையில் ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவஸம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோயில் கண்காணிப்பாளர் சோனாச்சலம், கோயில் மேலாளர் ஆறுமுகம் நயினார், கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.