பதிவு செய்த நாள்
02
செப்
2013
11:09
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யாவைகுண்டசாமி தலைமைபதியில் 147 அடி உயரவைகுண்ட ராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நீதியரசர் ஜோதிமணி மற்றும் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற சாமிதோப்பு அய்யாவைகுண்டசாமி தலைமைபதியின் பிரதான கிழக்கு வாயில் முன்பு 147 அடி உயரத்தில் வைகுண்டராஜகோபுரம் கட்டப்படஉள்ளது. 49 அடி அகலமும், 60 அடி நீளமும், தரைக்கு கீழே 30 அடி ஆழத்திற்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது. 11 நிலைகள் கொண்ட இந்தகோபுரத்தில், விமானம் மற்றும் 11 கோபுர கலசம் வைக்கப்படுகிறது.16 பில்லர் கொண்ட இந்த கோபுரத்தில் அழகிய சுதை வேலைபாடுகள் மற்றும் அகிலதிரட்டின் முக்கிய அம்சங்கள் இதில் சிற்பமாக வடிவமைக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ள இந்த ராஜகோபுரத்தின் மொத்த செலவு தொகை 7 கோடி என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. மேலும் வைகுண்டர் பேரரங்கம் மற்றும் பக்தர்களின் அனைத்து வசதிகளும் செய்யப்படஉள்ளது. குருமார்கள் , அய்யாவைகுண்ட அறநெறி பரிபாலன அறக்கட்டளை மற்றும் உபயதாரர்கள் உதவியுடன் கட்டப்படஉள்ளது. கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. காலை 10.30 மணியளவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், பசுமை தீர்ப்பாய நீதிபதி நீதியரசர் ஜோதிமணி, நாகர்கோவில் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மற்றும் பலர் சாமிதோப்பு அய்யா வைகுண்டசுமாமி பதிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் பதிக்குள் சென்று, சிவசிவ அரகரா என்ற நாமம் செல்லி பதிவலம் வந்து பள்ளியறையில் பணிவிடை செய்து அம்மா தன்னிறைவு திட்டத்தின்கீழ் ராஜகோபுரத்திற்காக, ஐந்து செங்கல்களை கொண்டு வந்து, முத்தரி பதம் கொண்டுவந்து அடிக்கல் நாட்டப்பட்டது பின்னர் நடந்த நிகழ்ச்சிக்கு பூஜிதகுரு பாலஜனாதிபதி தலைமைவகித்தார். வக்கீல் யுகேந்த் வரவேற்றார். குருமார்கள் ராஜவேல்,பையன் கிருஷ்னராஜ்,பையன் நேமி, பையன் கிருஷ்னநாமமணி, பையன் செல்லவடிவு, ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த், லோக்.பாலபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பசுமை தீர்ப்பாயம் நீதிபதி நீதியரசர் ஜோதிமணி பேசியதாவது:- காந்தியடிகள் மனிதர்கள் அனைவரும் சமம் என்று மனிதஇயக்கம் நடத்தினார். அமெரிக்காவில் அடிமைதனத்தை ஒளிக்க ஒரு இயக்கம் ஆரம்பித்து வெற்றிகண்டார். அதுபோல் இந்தியாவிலும் பல்வேறு இயக்கங்கள் தோன்றியது. ஆனால் இந்தியாவில் உள்ள அனைவரும் ஒன்று என்ற நோக்கத்தோடு தோன்றியது அய்யாவழி மட்டுமே. காந்தயடிகள், ஆபிரகாம்லிங்கன், அய்யாவைகுண்டர் அனைவருமே ஒரே நோக்கம் கொண்டவர்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமை வக்கீல் சேதுராமன், டாக்டர் விஜயகோபால், மாவட்டசெயலாளர் சிவசெல்வராஜன், ஒன்றிய செயலாளர் தம்பிதங்கம், சதாசிவம், அரசு வக்கீல் பாலகிருஷ்னன், கரும்பாட்டூர் பஞ்.,தலைவர் பாலமுருகன் உட்பட ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் வைகுந்த் நன்றி கூறினார்.