காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் உறியடி திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2013 04:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி கோவில் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள வைனவ கோவில்களில் பிரசித்தி பெற்றது யதோத்தகாரி கோவிலும் ஒன்று. 108 திவ்யதேச கோவில்களில் இந்த கோவிலுக்கு கூடுதல் சிறப்பு உண்டு. பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம். ஆவணி மாதம் அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் அவதரித்தார். அந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா நடக்கிறது. இதன்படி யதோக்தகாரி பெருமாள் கிருஷ்ணரை அழைத்து சென்று உறியடி நிகழ்ச்சியை காட்டுவதாக ஐதீகம். நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு சுவாமி புறப்பட்டு பொய்யாகுளம் பகுதியில் உறியடி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு எழுந்தருளினார். அதன் பின், சின்ன காஞ்சிபுரத்தில் கண்ணப்பன் தெரு, தேசிய செட்டி பாளையம் ஆகிய பகுதிகளுக்கு பெருமாள் கிருஷ்ணருடன் எழுந்தளினார். இரவு கோவிலுக்கு திரும்பினார்.