அனுப்பர்பாளையம்: அனுப்பர்பாளையம் ஸ்ரீவிநாயகர் மற்றும் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில், மண்டல பூஜை விழா நேற்று நடந்தது. காலை 9.00 மணிக்கு, சங்காபிஷேக நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது. மதியம் 12.00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 8.00 மணிக்கு ஆடல், பாடல், கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.