பாண்டி கோயிலில் தொடரும் முறைகேடு எஸ்.பி. : எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2013 11:09
மதுரை: மதுரை ரிங் ரோட்டில் பாண்டி கோயில் உள்ளது. பக்தர்களிடம் கோயில் அறங்காவலர்கள் பூசாரிகள் காணிக்கை என்ற பெயரில் அதிகளவில் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. சில நாட்களுக்குமுன்கூட உண்டியல் பணம் திருடியதாக கோயில் நிர்வாகத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து கோயிலில் முறைகேடு நடப்பதாக எஸ்.பி. பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் நேர்த்திக் கடனுக்கு கொண்டு வரப்படும் ஆடு ஒன்றிக்கு ரூ.250ம் அதை வெட்ட ரூ.40ம் சேவல் அறுப்பதற்கு ரூ.20ம் முறைகேடாக வசூலிக்கப்பட்டது தெரிந்தது. தேங்காய் பழம் கொண்ட பூஜை தட்டுக்கு ரூ.200ம் நிலைமாலையுடன் கூடிய பூஜை தட்டுக்கு ரூ.500ம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானத்திற்கு சிலருக்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை மீண்டும் கடைகளுக்கு மறுவிற்பனை செய்துள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என கோயில் அறங்காவலர்களுக்கும் பூசாரிகளுக்கும் எஸ்.பி. எச்சரித்துள்ளார். பக்தர்களுக்கு ஏதேனும் விதிமீறல் தெரியவந்தால் 0452- 252 5307ல் புகார் செய்யலாம் என எஸ்.பி. தெரிவித்தார்.