பதிவு செய்த நாள்
05
செப்
2013
11:09
லத்தூர்:லத்தூர் பழவேத்தம்மன் கோவிலில், தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. லத்தூர் கிராமத்தில் உள்ள பழவேத்தம்மன் கோவிலில், தேர் திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம், காலை 11:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு, வரிசை எடுத்தல், திருக்கல்யாணம், அன்னதானம் ஆகியவையும், இரவு 10:00 மணிக்கு, தேர் வீதியுலாவும் நடைபெற்றது. நேற்று, 12:00 மணிக்கு, அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற்றது.