சேத்தியாத்தோப்பு: மழவராயநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் விநாயகர் மற்றும் சீதாளதேவி எனும் மாரியம்மன் கோவில் ரூ. 40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி மாலை 6.00 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. 3ம் தேதி காலை முதல் இரவு வரை விஸ்வ ரூப தரிசனம், இரண்டாம் மூன்றாம் கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை 7.00 மணிக்குத் சூர்யபூஜை, மண்டப பூஜை, நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு செய்து, 10.15 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. கும்பாபிஷேக விழா பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரவிஐயர், ரவிசுந்தர் குருக்கள் முன்னின்று நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.