பதிவு செய்த நாள்
06
செப்
2013
10:09
மயிலாடுதுறை: அய்யாவாடி, மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில்,நேற்று, நிகும்பலா யாகம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த, அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிராதேவி கோவில் உள்ளது. ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும், இக்கோவிலுக்கு வந்து, அம்பாளை பூஜித்து, வேண்டிய வரங்களை பெற்றதாக, கூறப்படுகிறது. இங்கு, அமாவாசைதோறும், மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும், நிகும்பலா யாகம் சிறப்பானது. பக்தர்கள், ஆசையை விட்டு, இந்த யாகத்தில் கலந்து கொண்டு, அம்பாளிடம் சரணடைந்தால், சத்ரு உபாதைகள் நீங்கி, சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவர் என்பது ஐதீகம். ஆவணி மாத அமாவாசையான, நேற்று, மகாபிரத்தியங்கிரா தேவிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளி,பூஜை நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, மிளகாய் வற்றல் கொட்டி, நிகும்பலா யாகம் நடந்தது.