தியாகதுருகம்: வீரசோழபுரம் சிவன் கோவிலை செப்பனிட்டு சீரமைக்க கடஸ்தாபனம் பூஜை நடந்தது.தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரத்தில் மணிமுக்தா ஆற்றின் கரையில் நூற்றாண்டு பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இது பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. பக்தர்கள் முயற்சியால் தினமும் மூலவருக்கு நித்ச்திய பூஜைகள் நடந்து வருகிறது.இக்கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தவும், திருத்தேர் பணிகள் நடக்கவும், ஆலய இடசுத்தி செய்வதற்காகவும் சிறப்பு கடஸ்தாபன பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு ருத்ர ஹோமம் நடந்தது.பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு மூலவருக்கும், பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஜோதிடர் செல்லத்துரை, கோவில்குருக்கள் துரை, பாளையக்காரர் தெய்வீகன் உள்பட பக்தர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.