Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ... குருவாயூர் கோவில் தங்கத்தை கைப்பற்ற திட்டமா? குருவாயூர் கோவில் தங்கத்தை கைப்பற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய கருப்பு சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
11:09

விருதுநகர்: காரியாபட்டி தாலுகா, ஆவியூர் கிராமம் சொல்லாயி அம்மன் புன்னியஸ்தலத்தில் அமைந்துள்ள பெரிய கருப்பு சுவாமி திருக்கோயில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. கோயிலில் பெரிய கருப்பு சுவாமி, ஸ்ரீ ஆண்டிச்சாமி, ஸ்ரீ வீரபத்திர சுவாமி, ஸ்ரீ இருளப்ப சுவாமி, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ ராக்காயி அம்மன், ஸ்ரீ இருளாயி அம்மன், ஸ்ரீ சின்னக்கருப்பு சுவாமி, ஸ்ரீ சோணை சுவாமி, ஸ்ரீ செல்லாயி அம்மன் மற்றும் உள்ள பரிவார தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்து  ஆவணி மாதம் 26ந் தேதி 11.9.13 புதன்கிழமை ஷஷ்டி திதியும், அனுஷம் நட்சத்திரமும், சித்தயோகமும், அமிர்த யோகமும் கூடிய சுப ஜெய நேத்ரம் பொருந்திய நன்நாளில் காலை 9.05 மணிக்குமேல் 10.25 மணிக்குள்ளாக அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்: ஆவணி 24ம் தேதி (9.9.13) திங்கட்கிழமை..

மாலை 4.00 மணி மங்கள இசையுடன் யஜமான சங்கல்பம் அனுக்ஞை விக்னேஸ்வரபூஜை, தேவதா அனுக்ஞை கணபதி ஹோமம், பூர்ணாஹுதி
மாலை 6.00 மணி முதல் தீர்த்த பூஜை, பிரவேசபலி, ரக்ஷாபந்தன ஹோமம், மிருத்ஸக்கிரஹம் அங்குரார்பணம் கும்ப அலங்காரம், கலாகர்ஷனம்
இரவு 8.00 மணி யாகசாலை பிரவேசம், மண்டபாராதனம்
இரவு 8.30 மணி விசேஷ திரவ்யாஹூதி
இரவு 9.00 மணி பூர்ணாஹுதி, தீபாராதனை(காலம்-1)

ஆவணி 25-ம் தேதி(10.9.13) செவ்வாய்கிழமை:

அதிகாலை 5.30 மணி: மஹாகணபதிஹோமம், 1008 அஷ்டோத்திரம் சகல பரிவார தெய்வங்களுக்கும் ருத்ரஜபம், ஸ்ரீ ஸீக்தம், நாராயண ஸீக்தம், சுதர்ஸனம் ஹோமம், சகருட ஜபம்
காலை 9.00 மணி: மகேஸ்வர பூஜை மூலமந்திரம் அஸ்திர மந்திரங்களால் சகல தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல்
காலை 10.30 மணி: புதிய பிம்பங்கள் நயநோன் மீரன பூஜை
காலை 11.00 மணி: இரண்டாம் கால மஹா பூர்ணாஹுதி தீபாராதனை
மாலை 4.30 மணி: பூர்ணகும்பம், ஊர்வலம், மங்கள இசையுடன் வேதிக்கார்ச்சனை பஞ்சஸீக்தம் லெட்சுமி பாக்கிய ஹோமம், வில்வர்ச்சனை, காயத்திரி ஜெபம்
இரவு 7.00 மணி: மூலமந்திர ஜெபஹோமம், துர்க்கா ஹோமம், சரஸ்வதி ஹோமம் பாக்கியஹோமம், லெட்சுமி ஹோமம், குபேர ஹோமம், வருணஹோமம்
இரவு 9.30 மணி: மஹாபூரணாஹுதி தீபாராதனை(காலம் 3)
இரவு 10.. மணி சதுர்வேத பாராயணம் திருமுறை நடைபெறும்.

ஆவணி 26ம் தேதி (11.9.13) புதன்கிழமை:

காலை 6.15 மணி மங்கள இசையுடன் கணபதி ஹோமம் மண்டப சாந்தி, கோபூஜை, ரஹ்ஷாபந்தனம்
காலை 8.30 மணி நாடீசந்தானம் ஸ்பர்சாஹுதி
காலை 9.05 மணி மஹா பூர்ணாஹுதி தீபாராதனை (காலம் 4)
காலை 9.30 மணி யாத்ராதானம், கடம் புறப்பாடு
காலை 10.25 மணி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்
காலை 11.00 மணி அபிஷேகம், தீபாராதனை பிரசாதம் வழங்குதல்

கும்பாபிஷேகம் சர்வசாதகம்: சிவகாம வாசஸ்பதி சிவஸ்ரீ வி. என். எஸ். காத்திகேயன் சிவாச்சாரியார்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar