பதிவு செய்த நாள்
10
செப்
2013
12:09
நல்லெண்ணத்துடன் பழகி மகிழும் மீன ராசி அன்பர்களே!
கடந்த மாதத்தைவிட இந்த மாதம் நன்மை அதிகரிக்கும். தொடக்கத்தில் செவ்வாய் 5-ம் இடமான கடகத்தில் உள்ளார். இதனால் எதிரி தொல்லை வரலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. செவ்வாய் அக்டோபர் 9ல் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகி நன்மை தருவார். பொருளாதார வளம் கூடும். பகைவர் தொல்லை நீங்கும்.ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாயின் சாதக பலனால் புதிய நிலம், மனை, வீடு வாங்க யோகமுண்டு. ராணுவம் மற்றும் போலீஸ் துறையினர் சிறந்து விளங்குவர். கல்வி காரகனாகிய புதன், 7ம் இடமான கன்னியில் இருக்கிறார். குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆனால் செப்டம்பர் 23-ந் தேதி புதன் துலாமிற்கு சென்று நன்மை தருவார். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, போட்டிகளில் வெற்றி காண்பர். சுக்கிரன் மாதம் முழுதும் நன்மை தருவார். தொடக்கத்தில் 8-ம் இடமான துலாமில் இருப்பதால் வீட்டிற்கு தேவையான வசதி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். அக்டோபர் 4-ந் தேதி அவர் விருச்சிகத்திற்கு மாறினாலும் நன்மை தொடரும். பொருளாதார வளம் கூடும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். கலைஞர்களின் வாழ்வில் ஒளிவீசும்.சூரியன் 7-ம் இடமான கன்னியில் உள்ளார். இதனால் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். முக்கிய கிரகங்களில் குரு 4-ம் இடத்தில் இருப்பது சாதகமில்லை என்றாலும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் ராசிநாதன் என்பதால் அவரால் கெடுபலன் வராது. கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிலரது வீடுகளில் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும். கவனமாக இருக்கவும்.
நல்லநாட்கள்:செப்.20, 21, 24,25, 26, அக்.2, 3,4,11,12,13, 14,17
கவன நாட்கள்: அக்.6,7
அதிர்ஷ்ட எண்கள்: 1,9 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு கண்டிப்பாக தேவை. வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள்.