பதிவு செய்த நாள்
09
அக்
2013
05:10
எதையும் திடமாகச் செய்து முடிக்கும் மேஷராசி அன்பர்களே!
ஆட்சி நாயகனாக இருந்தாலும் செவ்வாய் தற்போது தனது பகை வீடான சிம்மத்தில் தஞ்சம் புகுந்திருப்பது சிறப்பானது அல்ல. அவரால் சேர்க்கை விவகாரத்தில் பிரச்னை ஏற்படலாம். உடல் நிலையில் லேசாக பாதிப்பு வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது பார்வையால் பல்வேறு சிறப்புகளை காணலாம். காரிய அனுகூலம் ஏற்படும். இந்த மாதம் சனி, ராகுவோடு புதனும், சூரியனும் இணைந்து துலாமில் உள்ளனர். இவர்களில் எந்த கிரகங்களும் நன்மை தரும் இல்லை. ஆனால், இவை மீது சுபகிரகமான குருவின் பார்வை விழுகிறது. இதனால் கெடுபலன்கள் அதிகம் நடக்காது. சூரியனால் அலைச்சல் அதிகரிப்பதுடன், அவப்பெயர் வரலாம். புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மனக்கவலை ஏற்படும். ஆனால், அக். 24 முதல் நவ. 14வரை புதன் வக்கிரம் அடைந்து கன்னிக்கு செல்கிறார். இந்த காலத்தில் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்,குடும்பம் மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் திளைக்கும். அக்.31ல் சுக்கிரன் 9ம் இடமான தனுசுக்கு செல்கிறார். அவரால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும்.இந்த மாதம் உங்களுக்கு இன்னொரு வரப்பிரசாதம் நிகழ்கிறது. 3-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் நன்மை தரும் இடத்தில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். ஆனால், அவர் அக். 22 முதல் வக்கிரம் அடைய தொடங்குகிறார். ஒருகிரகம் வக்கிரம் அடையும் போது அவரால் சிறப்பபாக செயல்பட முடியாது. எனவே குருவால் கெடுபலன்கள் நடக்காது. மாறாக, நன்மைகளை தரவும் தவறமாட்டார். அவரால் எந்த பிரச்னைகளையும் முறியடிக்கும் வல்லமை பெறலாம். மங்களகரமான சூழ்நிலை உருவாகும்.
நல்ல நாட்கள்: அக்.19,20,24,25,31, நவ.1,2,3,4,9,10, 11,12, 15,16
கவன நாட்கள்: நவ.5,6
அதிர்ஷ்டஎண்: 4,8 நிறம்: வெள்ளை, பச்சை.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டை கடலை தானம் செய்யலாம். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.